Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் நிக்கியது சரி - ஏதற்கு கேதர் ஜாதவ்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் நிக்கியது சரி - ஏதற்கு கேதர் ஜாதவ்?

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Oct 2020 11:00 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியுடன் மோதியது இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் தொடர்ந்து மூன்று தோல்விகளை சென்னை அணி சந்தித்துள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெறும் சவாலாக உள்ளது.

இந்த தொடர் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுவது அணி தேர்வில் ஏற்படும் குறைபாடுகள் தான் என கூற்படுகின்றது. நேற்றய போட்டியில் சென்னை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. தொடக்க வீரர் முரளி விஜய்க்கு பதிலாக அம்பத்தி ராய்டு மற்றும் ரூத்ராஜ் ஜெக்வாய்ட் பதிலாக சர்தூல் தாகூர் மற்றும் ஹசால்வுட் பதிலாக ஆல்-ரவுண்டர் டுவைன் ப்ராவோ அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் கேதார் ஜதாவ் அணியில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்கள் சமுக ஊடங்களில் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நேற்றய போட்டியில் மிடில் ஆடரில் களம் இறங்கிய கேதார் ஜாதவ் 10 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் கேதர் ஜாதவ் பவுலிங் செய்யாத நிலையில் ஏதற்கு அணியில் இருக்கிறார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை கேட்டு வருகின்றனர். தோனியின் இந்த முடிவில் ரசிகர்கள் அதிர்த்தி வெளிபடுத்தி உள்ளனர். இந்த முடிவில் இருந்து தோனி வெளிவர வேண்டும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களை களம் இறக்க வேண்டும் என கூறிவருகின்றனர். கேதர் ஜாதவ் இதுவரை சென்னை அணிக்காக ஒரே ஒரு முறை 30+ ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story