Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய யூஏஇ வந்தடைந்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய யூஏஇ வந்தடைந்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Oct 2020 11:00 AM GMT

ஐபிஎல் தொடர் பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தனது சொந்த ஊரான நியூசிலாந்திற்கு சொந்த காரணங்களுக்காக சென்ற நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் பாதி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிய அளவில் பாதிப்பு எற்ப்படும் என அணி நிர்வாகம் கவலைப்பட்ட நிலையில் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் பென் ஸ்டோக்ஸ் இல்லாமலேயே இரண்டு முக்கிய போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தினார். தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் , ஸ்டிவ் ஸ்மித் மற்றும் ஆர்ச்சர் ஆகிய மூன்று வீரர்கள் முக்கிய இடங்களில் விளையாடி வருகின்றனர். பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத நிலையில் டாம் கர்ரன் அந்த இடத்தை ஓரளவு நிரப்பி வருகின்றார்.

இந்நிலையில் தற்பொழுது நியூசிலாந்தில் இருந்து யூஏஇக்கு பென் ஸ்டோக்ஸ் நேற்று வந்தடைந்தாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இந்நிலையில் அவர் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு அணியில் இணைவார் என தெரிகின்றது. பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியில் இணையும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெரிய பலம் வாய்ந்த அணியாக மாறும் என கூறப்படுகின்றது. பென் ஸ்டோக்ஸ் வரும் 14ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். தற்பொழுது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Next Story