Top
undefined
Begin typing your search above and press return to search.

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மூன்றாவது வெற்றி.!

விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி மூன்றாவது வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Oct 2020 4:00 AM GMT

ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரில் தொடர் வெற்றிகளை பெங்களுரு அணி பெற்று வருகின்றது. ராஜஸ்தான் அணியும் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று வலுவான அணியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிபட்டியலில் முதல் இடம் பெரும் என்பதால் இந்த போட்டியில் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் முதலில் பேட்டிங்க் செய்வதாக கூறி களம் இறங்கிய ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் 22 ரன்னிலேயே நடையை கட்டினார் ஜாஸ் பட்லர் இரண்டு முக்கிய பேட்மேன்களும் சொதப்பிய நிலையில் சாம்சன் 4 ரன்னில் அவுட் ஆக ராஜஸ்தான் அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.

பின்னர் களம் இறங்கிய லோமர் மட்டும் நிலைத்து விளையாடினார். கடைசி ஓவர்களில் திவேட்டியா மற்றும் ஆர்ச்சரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி 154 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் துவக்க வீரர் ஆரோன் பின்ச் 8 ரன்னில் அவுட் ஆகினாலும் மற்றொரு துவக்க வீரரான இளம் இந்திய வீரர் தேவ்தேத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் கோலி முதல் மூன்று போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார். பெங்களுரு அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Next Story