Top
undefined
Begin typing your search above and press return to search.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நோருக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி - டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதல் இடம்.!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நோருக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி - டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதல் இடம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Oct 2020 3:00 AM GMT

ஐபிஎல் தொடரின் 16 வது லீக் போட்டி ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் வழக்கம் போல் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே கொல்கத்தா அணி தவறு செய்ததாகவே கூறலாம். ஷார்ஷா மிகவும் சின்ன ஸ்டியத்தில் முதலில் பேட்டிங்க் செய்வது நல்லது என கூறப்பட்டது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் துவக்க வீரர் ஷிகார் தவண் அதிரடியாக தொடங்கினாலும் 26 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துகளை நான்கு புறமும் வீளாசினார். மறுமுனையில் அதிரடி காட்டிய ப்ரித்திவ் ஷா 66 ரன்னில் வெளியேற பின்னர் வந்த ரிஷப் பண்ட் 38 ரன்னில் அவுட் ஆகினார். ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடினார் ஷ்ரேயஸ் ஐயர். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 229 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில் கில் மற்றும் நித்திஷ் ராணா மட்டும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். கில் 28 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஸல் 13 ரன்னில் அவுட் ஆக ஷாக் கொடுத்தார். அதன் பின்னர் கடைசி ஓவர்கள் அதிரடி காட்டிய இயான் மோர்கனும் அவுட் ஆக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story