Top
undefined
Begin typing your search above and press return to search.

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  5 Oct 2020 3:00 AM GMT

ஐபிஎல் தொடரின் சூப்பர் சன்டேவில் நேற்று லீக் இரண்டு போட்டிகள் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக ஷார்ஷாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 6 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய சூரியக்குமார் யாதவ் 27 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் நிலைத்து விளையாடிய குயிடன் டி காக் அரைசதம் வீளாசினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய இஷான் கிஷன் 31 ரன்னில் அவுட் ஆகினார்.

இதை தொடர்ந்து அதிரடி வீரர் பெல்லார்ட் களம் இறங்கிய அதிரடி காட்ட மறுமுனையில் காட்டு அடி அடிக்கும் ஹர்டிக் பாண்டிய களம் இறங்கிய சிக்ஸர்கள் விளாசினார். ஹர்டிக் பாண்டிய 28 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய க்ரனாள் பாண்டிய நான்கு பந்துகளில் 20 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 208 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் 208 என்ற இலக்கை சேஷிங் செய்தது சன் ரைசர்ஸ் அணி. முதலில் களம் இறங்கிய பேஸ்ரோ 25 ரன்களில் வெளியேற பின்னர் வந்த மனிஷ் பான்டே 30 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து கேன் வில்லியம்சன் 3 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க நிலைத்து விளையாடிய டேவிட் வார்னர் 60 ரன்களில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் சொதப்ப சன்ரைசர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story