Top
undefined
Begin typing your search above and press return to search.

வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி.!

வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  5 Oct 2020 3:15 AM GMT

ஐபிஎல் தொடரின் சூப்பர் சன்டேவின் இரண்டாவது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதனை தொடர்ந்து களம் இறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் களம் இறங்கினர். தொடக்கதிலிருந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடியில் மாயங்க் அகர்வால் 26 ரன்னில் பெவுலியன் திரும்பினார். அதன் பின்னர் களம் இறங்கிய மந்திப் சிங் 27 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதை தொடர்ந்து கே.எல். ராகுல் உடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் களம் இறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 17 பந்தில் 33 ரன்கள் அடித்த பூரன் ஜடேஜாவிடம் சிறப்பான கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து நிலைத்து விளையாடிய கேப்டன் கே.எல் .ராகுல் அரைசதம் வீளாசிய நிலையில் 63 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் மேக்ஸ்வால் வழக்கம் போல் தடுமாற பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் அடித்தது.

அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினர். வாட்சன் சிக்ஸர் மழை பொழிந்தார். இருவரும் அரைசதம் வீளாசிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி வென்றது. பாப் டுப் ப்ளஸிஸ் 87 ரன்களும் வாட்சன் 83 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story