Top
undefined
Begin typing your search above and press return to search.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தோனி வெற்றி குறித்து கூறிய கருத்து.!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தோனி வெற்றி குறித்து கூறிய கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  5 Oct 2020 8:45 AM GMT

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களில் சிறப்பான பந்து வீச்சால் பஞ்சாப் அணி வீரர்கள் ரன்கள் எடுக்க தடுமாறினர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 63 ரன்களை அடித்தார். அதன் பின்னர் நிக்கோலஸ் பூரண் 33 ரன்கள் அடித்தார். பஞ்சாப் அணி 178 ரன்களை சேர்த்தது.

பின்னர் விளையாடிய சென்னை அணியில் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்நிலையில் போட்டி முடித்து வெற்றி குறித்து பேசிய தோனி கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் சிறிய விஷயங்களை கூட சரியாக செய்தோம். மேலும் எங்களது ஆட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை இந்த போட்டியில் வெளிப்பட்டது. இன்றைய போட்டியில் இருந்த துவக்கத்தை போன்று ஒரு துவக்கத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த இடத்தில் அனுபவம் வெளிப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியனர் என்று சொல்வதை விட அனுபவத்துடன் விளையாடினார்கள். வாட்சன் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதனை இப்போட்டியில் வெளிக்கொண்டு வந்துள்ளார். மேலும் சிறிது நேரம் எடுத்து ஆடினால் அவரது ஆட்டம் எப்போதும் சிறப்பாகவே இருக்கும். அதே போன்று டு பிளசிஸ் சிறப்பாக விளையாடினார். இந்த வெற்றிக்கு அவர்கள் இருவருமே காரணம். இது ஒரு நல்ல விடயமாக மாறியுள்ளது.

இதன் பிறகு அணி தேர்வில் உள்ள விவாதங்கள் நிறைவுக்கு வரும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். எங்களது திட்டங்கள் பந்துவீச்சில் எவ்வாறு இருந்ததோ அதை சரியாக செய்து எதிரணியை அழுத்தத்தில் கொண்டு வந்தனர். இறுதியில் இது போட்டி ஒரு சிறப்பான போட்டியாக அமைந்தது என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story