Top
undefined
Begin typing your search above and press return to search.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பந்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பந்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  6 Oct 2020 3:15 AM GMT

ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியிலில் முதல் முன்னிலையில் இருக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் ப்ரித்திவ் ஷா இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய ப்ரித்திவ் ஷா 42 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன்னில் பெவுலியன் திரும்பினார்.

அதன் பின்னர் ஷிகர் தவன் 32 ரன்னில் வெளியேற பின்னர் ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஸ்டோனிஸ் 24 பந்தில் அரைசதம் வீளாசினார். அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் 37 ரன்கள் சேர்க்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் ப்ஞ்ச் மற்றும் தேவ்தேத் படிக்கல் இருவரும் தொடக்கத்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பாரத்த நிலையில் டிவில்லியர் 9 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் விராட் கோலியும் 43 ரன்னில் அவுட் ஆக பெங்களுரு அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Next Story