Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் சிறப்பான பந்து வீச்சால் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ்.!

மும்பை இன்டியன்ஸ் சிறப்பான பந்து வீச்சால் திணறிய ராஜஸ்தான் ராயல்ஸ்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Oct 2020 2:30 AM GMT

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலும் இருக்கும் இவ்விரு அணிகளும் மோதும் இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்பை எற்படுத்தியது. அதே நேரம் கடந்த இரண்டு சீசன்களில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் மும்பை இன்டியன்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

எனவே இந்த தொடர் தோல்விக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என மும்பை இன்டியன்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் டி காக் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். டி காக் 23 ரன்களும் ரோஹித் சர்மா 35 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். அதன் பின்னர் களம் இறங்கிய சூரியக்குமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அற்புதமாக விளையாடி அரைசதம் வீளாசினார். தொடர்ந்து கடைசி வரை விளையாடிய சூரியக்குமார் யாதவ் 79 ரன்கள் குவித்தார். இதை தொடர்ந்து மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 193/4 ரன்களை சேர்த்தது.

அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே முக்கியமான விக்கெட்களை இழந்தது. கேப்டன் ஸ்மித் 6 ரன்னிலும் சாம்சன் 0 ரன்னிலும் அவுட் ஆகினர். பட்லர் மட்டும் நிலைத்து விளையாடி 70 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க மும்பை இன்டியன்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் பும்ரா, போல்ட், பட்டின்சன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர்.

Next Story