Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து பேசிய விராட் கோலி.!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி  குறித்து பேசிய விராட் கோலி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Oct 2020 2:40 AM GMT

ஐபிஎல் தொடர் மிகவிறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களுரு அணி மிகமோசமான முறையில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ப்ரித்திவ் ஷா மற்றும் ஷிகர் தவண் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதை தொடர்ந்து கடைசி ஓவர்களில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வலுவான ஸ்கோர் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்கத்திலிருந்து சொதப்பியதில் பெங்களுரு அணி தோல்வியை நோக்கி சென்றது. இந்நிலையில் பெங்களுரு அணியில் விராட் கோலி மட்டும் 43 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் போட்டியின் முடிவில் தோல்வி குறித்து பதில் அளித்த விராட் கோலி கூறியதாவது: இந்த போட்டியின் நடுவே எங்களுக்கு வாய்ப்புகள் வந்தது அதை நாங்கள் பயன்படுத்த தவறவிட்டோம். எங்கள் அணியின் பந்து வீச்சின் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. எங்களின் அனைத்து திட்டங்களையும் ப்ரித்திவ் ஷா அதிரடி ஆட்டத்தால் முறியடித்து விட்டார்.

இது எங்களின் தோல்விக்கு ஒரு காரணம். மற்றும் ஆட்டத்தின் இறுதயில் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி ஆட்டம் எங்களால் கட்டுபடுத்த முடியவில்லை அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த இரு காரணங்கள் தான் எங்களின் இந்த தோல்விக்கு காரணம் என கூறினார். பெங்களுரு அணி ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

Next Story