Top
undefined
Begin typing your search above and press return to search.

தோனியின் இந்த தைரியமான முடிவு மற்றும் நம்பிக்கைக்கு பெரிய சல்யூட் - பிரேட் லீ கருத்து.!

தோனியின் இந்த தைரியமான முடிவு மற்றும் நம்பிக்கைக்கு பெரிய சல்யூட் - பிரேட் லீ கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Oct 2020 2:54 AM GMT

ஐபிஎல் தொடரில் அனைத்து சீசன்களிலும் வெற்றி பெற்று ப்ளே-ஆப் சுற்று செல்லும் ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய ஐபிஎல் அணிகளில் ஒன்று. ஆனால் இந்த சீசனில் முதல் போட்டியை தவிர்த்து அடுத்து நடைபெற்ற மூன்று லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இது ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை எற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு ப்ளே-ஆப் சுற்றுக்கு போகுமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சென்னை அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர். வாட்சன் ஒரு மேட்ச் வின்னர் என நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கையை வாட்சன் கடைசி போட்டியில் நிறைவேற்றினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா வீரர்.

ஆஸ்திரேலியா அணியின் பிரெட் லீ கூறுகையில்: தோனியும், அணி நிர்வாகமும் குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களின் மீதும் நம்பிக்கை வைத்து அவர்களை தொடர்ந்து விளையாட வைக்கின்றனர். விமர்சனங்களை முன் வைக்காமல் மேட்ச் வின்னர்களை நம்பி அவர்களது பலத்தை வைத்து தொடர்ந்து விளையாட வைப்பது வீரர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும். தொடர் தோல்விகளுக்குப் பிறகும் வாட்சன் போன்ற மேட்ச் வரை தொடர்ந்து விளையாட வைத்த தோனியின் முடிவுக்கு தான் தலை வணங்குவதாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சில போட்டிகளில் சொதப்பினாலும் வீரர்களின் உண்மையான திறமையின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அவர்களை நம்பி முழு தொடரிலும் வாய்ப்பு அளிக்கலாம் அப்படி ஒரு வெற்றிகரமான கேப்டன் தோனி அவரது பலமே அதுதான் என்பதை மீண்டும் ஒருமுறை காட்டி உள்ளார் என்றும் பிரெட் லீ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story