Top
undefined
Begin typing your search above and press return to search.

புவனேஷ்வர் குமார் தொடரில் இருந்து விலகல் - ஒரே நாளில் மாற்று வீரரை அறிவித்தது ஐத்ராபாத் அணி.!

புவனேஷ்வர் குமார் தொடரில் இருந்து விலகல் - ஒரே நாளில் மாற்று வீரரை அறிவித்தது ஐத்ராபாத் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Oct 2020 11:15 AM GMT

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி வீரர் புவனேஸ்வர் குமார்க்கு தொடை மற்றும் இடுப்பு பகுதியில் வழி ஏற்பட்டு போட்டியின் நடுவே வெளியேறினார். இதன் காரணமாக ஐத்ராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்பொழுது தொடரை விட்டே விலகி உள்ளார். இது சன் ரைசர்ஸ் அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு நாளில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி புவனேஸ்வர் குமார்க்கு மாற்று வீரரை அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லெப்ட் ஆம் பவுலரான ப்ரித்திவ் ராஜ் என்ற வீரரை தேர்வு செய்துள்ளது. விரைவில் சன் ரைசர்ஸ் அணியில் அந்த வீரர் இணைவார் என தெரிகின்றது. சன் ரைசர்ஸ் அணி ஏற்கனவே மிட்சல் மார்ச் தொடரை விட்டு விலகிய போது உடனே மாற்று வீரரை அறிவித்து அதே போல் தற்பொழுதும் மாற்று வீரரை உடனே அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஏன் இன்னும் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவருக்கும் இன்னும் மாற்று வீரரை அறிவிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி ஏழுப்பி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் தொடர் ஆரம்பத்திற்கு முன்பே தொடரில் இருந்து இலகிய நிலையில் இதுவரை மாற்று விரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிக்கவில்லை. சென்னை அணி இவர்கள் இல்லாமல் தடுமாறி வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story