Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாட்-ரிக் தோல்விக்கு இது தான் காரணம் ஸ்மித் விளக்கம்.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஹாட்-ரிக் தோல்விக்கு இது தான் காரணம் ஸ்மித் விளக்கம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  8 Oct 2020 5:12 AM GMT

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் அணிக்கு இது தொடர்ந்து மூன்றாவது தோல்வி ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அந்த முதல் இரண்டு போட்டிகளும் ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது.

ஷார்ஷா கிரிக்கெட் மைதானம் சிறிய மைதானம் என்பதால் அந்த மைதானத்தில் அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடுகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற போட்டிகளில் தோல்வியே தழுவியுள்ளது. இந்த போட்டி அபுதாபி மைதனத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் மும்பை அணி ராஜஸ்தான் ராயலஸ் அணி வீரர்களின் பந்துகளை வெலுத்து வாங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை அணி வீரர்களின் பந்து வீச்சில் திணறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்நிலையில் இந்த போட்டி முடிவில் கேப்டன் ஸ்மித் தோல்வி குறித்து பேசினார்.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். அது போட்டிக்கு உதவவில்லை மேலும் நாங்கள் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டியில் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை அதுவே தோல்விக்கு காரணமாக கருதுகிறேன். எங்கள் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் ஆர்ச்சர் ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.

நாங்கள் இன்னும் பேட்டிங்கில் நிறைய சரி செய்ய வேண்டிய இடங்கள் இருக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து நாங்கள் அதிகம் பயப்படத் தேவையில்லை. எங்களது திட்டங்களை சரியாக பயன்படுத்தினால் நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும். மேலும் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் எங்களால் சிறந்த துவக்கத்தை அளிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் இனி வரும் போட்டிகளில் சிறப்பான துவக்கத்தை அளித்து வெற்றிக்காக போராடுவோம் என்று ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story