Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரச்சி தோல்வி.! கேதார் ஜாதவின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் ரசிகர்கள் கருத்து.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரச்சி தோல்வி.! கேதார் ஜாதவின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் ரசிகர்கள்  கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  8 Oct 2020 4:30 AM GMT

ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக திரிபாதி மற்றும் சுக்மன் கில் இருவரும் களம் இறங்கினர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். மறுமுனையில் சுக்மன் கில் 11 ரன்னிலும் ராணா 9 ரன்னிலும் நரைன் 17 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் தங்களின் விக்கெட்களை இழந்தனர். நிலைத்து விளையாடிய ராகுல் திரிபாதி மட்டும் 81 ரன்கள் குவித்தார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 167/10 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ப்ராவோ 3, சாம் கர்ரன் 2, தாகூர் 2, கரண் சர்மா 2 விக்கெட்களை வீழத்தினர்.

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடங்கம் சிறப்பாக அமைந்தது. பாப் டுப் ப்ளஸிஸ் 17 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய அம்பத்தி ராய்டு 30 ரன்னிலும் அவுட் ஆக வாட்சன் நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார். பின்னர் களம் இறங்கிய தோனி , சாம் கர்ரன் ஆகியோர் இறுதி ஓவர்களில் விக்கெட்களை இழக்க ஜாதவின் மோசமான ஆட்டத்தால் சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Next Story