Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை கிண்டல் அடித்த வீரேந்திர சேவாக்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை கிண்டல் அடித்த வீரேந்திர சேவாக்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  9 Oct 2020 4:30 AM GMT

ஐபிஎல் தொடரிடன் 21வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறும் நிலைக்கு சென்று கடைசி ஓவர்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் திரிபாதி 81 ரன்கள் குவிக்க கொல்கத்தா அணி டிஸ்சேன்ட் ஸ்கோரை எட்டியது. திரிபாதியை தவிர மற்று வீரர்கள் பெரியளவில் அடிக்காத நிலையில் 167 ரன்கள் சேர்த்தது.

அதை தொடர்ந்து விளையிடியா சென்னை அணியில் பாப் டுப் ப்ளஸிஸ் 17 ரன்னில் வெளியேற வாட்சன் நிலைத்து விளையாடி 50 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் அம்பத்தி ராய்டு 30 ரன்னில் வெளியேற மற்ற வீரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாது நிலையில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சென்னை அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில்: 168 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்குதான். சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக விளையாடினார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் சென்னை அணியில் சில வீரர்கள் அரசாங்க வேலை பார்ப்பவர்கள் போல் கடமைக்கு விளையாடி வருகிறார்கள் என்று தனது பாணியில் கிண்டலாகப் பேசியுள்ளார்.

சேவாக் குறிப்பிட்டது யாதெனில் : அரசு அரசு வேலை பார்ப்பவர்கள் என்றால் வேலை செய்யாவிட்டாலும் சம்பளம் சரியாக வந்துவிடும் என்பது போல அவர்கள் கடமைக்கு வந்து விளையாடி செல்கின்றனர் என்று கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை அவர் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story