Top
undefined
Begin typing your search above and press return to search.

சி.எஸ்.கே அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் - கவுதம் கம்பீர் கருத்து.!

சி.எஸ்.கே அணியில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் - கவுதம் கம்பீர் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Oct 2020 4:45 AM GMT

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றது. இதுவரை இதுபோன்று 2010 சீசனில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்திதது. அதன் பின்னர் இந்த சீசனின் முதல் ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது சென்னை அணியின் சீராற்ற தன்மை தான் என கூறுகின்றனர்.

இந்த சீசன் கொரோனா தொற்றிற்கு இடையில் நடைபெறும் நிலையில் இந்த சீசனுக்காக கட்டும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை அணிக்கு இந்த சீசன் தொடங்கும் மூன்பே பெரிய அளவில் சிக்கல்கள் ஏற்பட்டது. கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் பாதிப்படைந்தது முதல் சென்னை அணிக்கு பெரிய சிக்கல்கள் ஏற்பட்டனர். பின்னர் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முக்கிய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தொடரில் இருந்து விளகினார். இதனால் சென்னை அணியில் சிதறியது. இந்நிலையில் தான் சென்னை அணி முதல் ஆறு போட்டிகளில் இரண்டு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சென்னை அணிக்கு ஒர் அறிவுறை கூறியுள்ளார். அவர் கூறுகையில்…ஷேன் வாட்சன் தொடர்ந்து ஆடும் லெவனில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவரை நீக்கி விடக்கூடாது. ஏனென்றால் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக முடிந்துவிட்டது.

கேதர் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சரியாக ஆடாத நிலையில் இளம் வீரரை கெய்க்வாட் மற்றும் முரளிவிஜய் இறங்குவது சரியாக இருக்காது. அதேபோல ஷேன் வாட்சன் நன்றாக ஆடாவிட்டாலும், அடுத்த ஐந்து போட்டிகளுக்கு கட்டாயம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

Next Story