Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!

ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Oct 2020 4:30 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 13வது சீசனின் 23வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஹஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ அணி மூன்று தொடர் தோல்வியை தொடர்ந்து இந்த போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கி களம் இறங்குகிறது. அதே போல் ஷார்ஷாவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவண் மற்றும் ப்ரித்திவ் ஷா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களம் இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்னில் அவுட் ஆக டெல்லி அணி மோசமான நிலைக்கு சென்றது. அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் ஹெட்மயர் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணி நல்ல ஸ்கோரை சேர்த்தது. ஸ்டோனிஸ் 39 ரன்களும் ஹெட்மயர் 45 ரன்களும் சேர்த்தனர். இந்நிலையில் டெல்லி அணி 184 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் பட்லர் 13 ரன்னும் கேப்டன் ஸ்மித் 24 ரன்னிலும் அவுட் ஆக சாம்சன் 5 ரன்னில் வெளியேறினார். இதை தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் முக்கிய பேட்மேன்கள் அனைவரும் விக்கெட்களை இழக்க பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்த டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story