Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடர் தோல்விகளில் தவிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.!

தொடர் தோல்விகளில் தவிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Oct 2020 4:45 AM GMT

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி பகல் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 4 ரன்னில் பெவுலியன் திரும்ப அடுத்து களம் இறங்கிய ராணா 2 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் மோர்கன் 24 ரன்கள் அடித்தார். அவரை தொடர்ந்து சுகமன் கில் அரைசதம் வீளாசினார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் பல போட்டிகள் பிறகு இந்த போட்டியில் தான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பெரிதும் எதிர்பாரக்கப்பட்ட ரஸல் 8 ரன்னில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து கொல்கத்தா அணி 164 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. பல போட்டிகள் கழித்து மீண்டும் கே.எல். ராகுல் மற்றும் மயான்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 115 ரன்களை குவித்தது. மாயன்க் அகர்வால் 56 ரன்கள் சேர்த்தார்.

அவரை தொடர்ந்து களம் இறங்கிய பூரண் 16 ரன்னில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 74 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பஞ்சாப் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Next Story