Top
undefined
Begin typing your search above and press return to search.

வீராட் கோலியின் அதிரடியால் சென்னை அணியிடமிருந்து வெற்றியை தட்டிசென்றது பெங்களுரு அணி.!

வீராட் கோலியின் அதிரடியால் சென்னை அணியிடமிருந்து வெற்றியை தட்டிசென்றது பெங்களுரு அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Oct 2020 5:00 AM GMT

ஐபிஎல் தொடரின் 25 லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய பெங்களுரு அணியில் ஆரோன் பின்ச் 2 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து தேவ்தேத் படிக்கல் 33 ரன்னில் அவுட் ஆகினார்.

நிலைத்து விளையாடினார் கேப்டன் கோலி. ஆனால் வந்த வேகத்தில் கிளம்பினார் டி வில்லியர்ஸ் அவரை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னில் அவுட் ஆக பெங்களுரு அணி தடுமாறிய நிலையில் கடைசி நான்கு ஓவர்களில் 66 ரன்கள் குவித்தது. நிலைத்து விளையாடிய கோலி 90 ரன்கள் அடித்தார். அவருடன் விளையாடிய சிவம் துபே 22 ரன்கள் அடிக்க பெங்களுரு அணி 169 ரன்கள் சேர்த்தது.

அதனை தொடர்ந்து சென்னை அணி 170 என்ற இலக்கை சேஸிங்க் செய்தது. தொடக்க வீரர்கள் சென்னை அணியில் இந்த போட்டியில் சொதப்பினர். வாட்சன் 14 ரன்னிலும் பாப் டுப் ப்ளஸிஸ் 8 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் வந்த ராய்டு மற்றும் புதிய வீரர் ஜெகதிஸ்சன் இருவரும் நிலைத்து விளையாடினர். ஜெகதிஸ்சன் 33 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த தோனி 10 ரன்னில் வெளியேறினார். சென்னை அணி மோசமான நிலைக்கு சென்றது. ராய்டு 40 ரன்னில் அவுட் ஆக சென்னை அணி மீண்டும் ஒர் தோல்வியை சந்தித்தது.

Next Story