Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை அணி சேஸிங்க் செய்வதே தொடர் தோல்விக்கு காரணமா.!

சென்னை அணி சேஸிங்க் செய்வதே தொடர் தோல்விக்கு காரணமா.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Oct 2020 6:45 AM GMT

ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மேலும் ஒரு தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கோலி சென்னை பலவீனம் தெரிந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதுவே பெங்களுரு அணிக்கு வெற்றிக்கு முதல் படியாக அமைந்தது. காரணம் சென்னை அணி இந்த தொடரில் சேஸிங்கில் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகின்றது. முதலில் விளையாடிய பெங்களுரு அணி முதல் 16 ஒவர்கள் தடுமாறிய நிலையில் கடைசி 4 ஒவர்களில் ஆட்டத்தை மாற்றியது. அதுவே சென்னை அணியின் தோல்விக்கு காரணம்.

கோலி 90 ரன்கள் சேர்க்க பெங்களுரு அணி 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய சென்னை அணி வழக்கம் போல் தடுமாறியது. வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் அவுட் ஆக சென்னை அணி ஆட்டம் கண்டது. இறுதியில் இந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்தது சென்னை அணி. இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் : பேட்டிங் வரிசையில் எங்களுக்கு போதிய பலம் இல்லை. முதல் நான்கு வீரர்கலில் ஹிட்டர்கள் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தொடக்கத்திலிருந்து சிறப்பாக பந்துவீசி நெருக்கடியை உண்டாக்கினோம். ஆனால் கடைசி 4 ஓவர்களில் பவுலர்கள் தடுமாற்றத்தை அடைந்தனர். அதனை சாதகமாக பயன்படுத்திய பெங்களூர் அணி எங்களை அழுத்தத்திற்கு உண்டாக்கியது.

பேட்டிங்கை பொறுத்தவரையில் இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அதனை சரிசெய்து விரைவில் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் செயல்பட வேண்டும். எதிரணியில் மிடில் ஓவர்களில் யார் பந்துவீச போகிறார்கள் என்று சரியாக திட்டம் வகுக்காமல் பேட்டிங் செய்தோம் அதுவும் ஒரு பலவீனமாக அமைந்தது.

தோல்விகளை திரும்பிப் பார்க்க வேண்டாம் என்று நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவேன். ஏனென்றால் கடந்த தோல்வியை நினைத்தால் இந்த போட்டியின் மீது அழுத்தம் உண்டாகும். எனவே எதிர்வரும் போட்டிகளில் இந்த தடுமாற்றங்களை கலந்து மீண்டும் நாங்கள் எங்களை தயார் செய்து திரும்புவோம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story