Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல் இடத்திற்கு நடித்த சண்டையில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி முதல் இடம் பிடித்தது.!

முதல் இடத்திற்கு நடித்த சண்டையில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி முதல் இடம் பிடித்தது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Oct 2020 7:30 AM GMT

ஐபிஎல் தொடரின் 27 லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது . இந்த போட்டி சூப்பர் சன்டேவின் இரண்டாவது போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இவ்விரு அணிகளும் புள்ளிபட்டியில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் டெல்லி அணி பல மாற்றங்களுடன் களம் இறங்கியது. பண்ட் மற்றும் ஹட்மயர் இருவரும் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக அலேக்ஸ் கேரி மற்றும் ராஹானே இருவரும் களம் இறங்கினர்.

முதலில் விளையாடிய டெல்லி அணியில் ப்ரித்திவ் ஷா தொடக்கத்திலேயே அவுட் ஆக ஷிகர் தவண் நிலைத்து விளையாடினார். அடுத்து வந்த 16 ரன்னில் வெளியேற பின்னர் வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ஸ்டோனிஸ் 15 ரன்னிலும் அலேக்ஸ் கேரி 14 ரன்னும் எடுத்தனர். நிலைத்து விளையாடிய தவண் 69 ரன்கள் அடித்தார்.

பின்னர் விளையாடிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 5 ரன்னில் வெளியேற குயிடன் டி காக் நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார். அவருடன் விளையாடிய சூரியக்குமார் யாதவும் 53 ரன்கள் சேர்த்தார். பின்னர் களம் இறங்கிய இஷான் கிஷன் 28 ரன்கள் அடிக்க மும்பை அணி வெற்றியை எளிதில் எட்ட முடிந்தது. அதிரடியாக விளையாடிய குயிடன் டி காக் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது மும்பை அணி.

Next Story