Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐத்ராபாத் கையில் இருந்த வெற்றியை பறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.!

ஐத்ராபாத் கையில் இருந்த வெற்றியை பறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Oct 2020 8:30 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று சூப்பர் சன்டேவின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் பேஸ்ரோ இருவரும் களம் இறங்கினர்.

பேஸ்ரோ 16 ரன்னில் வெளியேற வார்னர் நிலைத்து விளையாடிய 46 ரன்கள் சேர்த்தார். அதன் பின்னர் களம் இறங்கிய மனிஷ் பாண்டே மோதுவாக விளையாடினார். இருப்பினும் அரைசதம் வீளாசினார். 54 ரன்னில் மனிஷ் பாண்டே அவுட் ஆக கடைசி ஓவர்களில் வில்லியம்சன் மற்றும் ப்ரான் கார்க் இருவரும் அதிரடியாக விளையாட ஐத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 158/4 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக இந்த போட்டியில் தான் இந்த சீசனை தொடங்கும் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் களம் இறங்கினார். ஆனால் 5 ரன்னில் பெவுலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஸ்மித் 5 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிரச்சி அளிக்க படலரும் 16 ரன்னில் விக்கெடை இழந்தார்.

அதை தொடர்ந்து களம் இறங்கிய ராபின் உத்தப்பா மற்றும் சாம்சன் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து வெளியேறினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் திவேட்டியா மற்றும் ரீயன் பாரக் இருவரும் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ராகுல் திவேட்டியா தேர்வு செய்யப்பட்டார்.

Next Story