Top
undefined
Begin typing your search above and press return to search.

கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது பெங்களுரு அணி.!

கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது பெங்களுரு அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Oct 2020 2:30 AM GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் படிக்கல் இருவரும் பெங்களுரு அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷார்ஷா மைதானம் சிறியது என்பதால் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் பறந்தனர். படிக்கல் 32 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஆரோன் பிஞ்ச் 47 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய டிவில்லியர்ஸ் வந்த முதல் பந்தில் இருந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். 33 பந்தில் 73 ரன்கள் குவித்தார் டிவில்லியர்ஸ் . பெங்களுரு அணி 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் பான்டன் மற்றும் கில் இருவரும் களம் இறங்கினர். பான்டன் 8 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ராணா 9 ரன்னிலும் மோர்கன் 8 ரன்னிலும் கார்த்திக் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். கொல்கத்தா அணி தடுமாறியது. பின்னர் வந்த ரஸல் மற்றும் திரிபாதி தலா 16 ரன்கள் மட்டும் அடித்து அவுட் ஆகினர். இதை தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்ப கொல்கத்தா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Next Story