Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய இந்திய வீரர்கள் விலகல்.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து இரண்டு முக்கிய இந்திய வீரர்கள் விலகல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Oct 2020 1:00 PM GMT

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் தொடர் எல்லா ஐபிஎல் தொடரை விட வித்தியாசமாக உள்ளது. வழக்கமாக ஐபிஎல் தொடர் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் ஆகிய அணிகள் தான் பலம் வாய்ந்த அணிகளாக திகழும் ஆனால் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

அதே நேரம் டெல்லி அணி ஏப்போழுதும் கடைசி இடங்களில் இருப்பது தான் வழக்கம் ஆனால் கடந்த சீசன் பிளே ஆப் சுற்றுக்கு வந்த நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இருந்து தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுவது டெல்லி அணியின் வீரர்களின் பட்டியல் தான் எலத்தில் சிறந்த வீரர்களை எடுத்ததன் மூலம் டெல்லி அணியில் இந்திய வீரர்களை மட்டும் வைத்தே ஒரு பிளையிங் லெவனை உருவாக்கும் அளவிற்கு வீரர்களை குவித்து வைத்துள்ளது.

இந்தியா வீரர்கள் வைத்தே பேட்டிங்கில் முதல் வரிசை வீரர்களை கொண்டு விளையாடி வருகின்றது. ஷிகார் தவன் , ப்த்திவ் ஷா , ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பன்ட் போன்ற வீரர்கள் தொடர் வரிசையில் உள்ளனர். இந்நிலையில் டெல்லி அணி விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வென்ற இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அமித் மிஸ்ரா காயம் காரணமாக தொடரை விட்டு விலகிய நிலையில் மற்றோரு இந்திய வீரராக இஷாந்த் சர்மா விலகி உள்ளார். இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரிய பாதிப்பாக அமைய உள்ளது.

Next Story