Top
undefined
Begin typing your search above and press return to search.

சன் ரைசர்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

சன் ரைசர்ஸ் அணிக்கு பதிலடி கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Oct 2020 11:15 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரின் 29 வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் பாதி போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரராக சாம் கரண் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ப்ளஸிஸ் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய வாட்சன் நிலைத்து விளையாட சாம் கர்ரன் அதிரடியாக 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய ராய்டு வாட்சனுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 41 ரன்கள் அடித்தார். வாட்சன் 42 ரன்கள் அடித்து அவுட் ஆக தோனி 21 ரன்களும் ஜடேஜா 25 ரன்களும் அடித்தனர். சென்னை அணி 167 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியில் வார்னர் தொடக்கத்திலேயே அவுட் ஆக மனிஷ் பாண்டேவும் 4 ரன்னில் நடையை கட்டினார். பின்னர் களம் இறங்கிய வில்லியம்சன் அதிரிடியாக 57 ரன்கள் சேர்த்தார். ஆனால் சன் ரைசர்ஸ் அணியாக இறுதி வரை வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

Next Story