Top
undefined
Begin typing your search above and press return to search.

சாம் கர்ரன் துவக்க வீரராக களம் இறங்கியது குறித்து தோனி கூறிய கருத்து.!

சாம் கர்ரன் துவக்க வீரராக களம் இறங்கியது குறித்து தோனி கூறிய கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Oct 2020 1:15 PM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் பாதி அளவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் தலா ஏழு போட்டிகள் விளையாடி உள்ளனர். இதில் மும்பை, டெல்லி , பெங்களுரு அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரையில் எந்த சீசனும் இல்லாத அளவிற்கு மூன்று போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் சென்னை அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் துவக்க வீரராக சாம் கர்ரன் களம் இறங்கினார். இது சென்னை அணியில் பெரிய மாற்றமாக பாரக்கப்பட்டது. சாம் கர்ரன் நான்காவது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் வீளாசினார். 31 ரன்கள் அடித்து அவுட் ஆகினார் சாம் கர்ரன். சென்னை அணிக்கு இந்த தொடரில் நல்ல துவக்கம் இல்லை என்பது அனைவரின் வருத்தமாக இருந்து வருகின்றது அதை சரிசெய்ய வேண்டும் என இந்த முடிவுக்கு சென்னை அணி வந்திருக்கும் என தெரிகின்றது.

இந்நிலையில் இது குறித்து போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் கேட்கப்பட்டது. அவர் கூறுகையில். சாம் கர்ரன் சிறந்த வீரர். சுழல் பந்து வீச்சிற்கு எதிராக நல்ல பேட்டிங்க் செய்யக்கூடியவர். இவரால் இந்த போட்டியில் 15 முதல் 45 ரன்கள் வரை விரைவாக அடிக்க முடியும் என நம்பினேன். அதே போல அவரும் எங்களுக்காக சிறப்பாக பேட்டிங் செய்தார். அதேபோல அவர் பந்து வீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டார். இனிவரும் போட்டிகளிலும் அவர் ஒரு தவிர்க்க முடியாத வீரராக அணியில் இருப்பார் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story