Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக கூறிய கேப்டன் ஸ்மித்.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்விக்கான காரணத்தை வெளிப்படையாக கூறிய கேப்டன் ஸ்மித்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Oct 2020 10:15 AM GMT

நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த இரு அணிஇளை பொறுத்த வரையில் டெல்லி அணி வலுவான நிலையில் எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் உள்ளது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் ஏட்டு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.

இந்நிலையில் நேற்றய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா டக் அவுட் ஆக ஷிகர் தவண் அற்பதமான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் களம் இறங்கிய ஸ்டோனிஸ் 18 ரன்களும் அலேக்ஸ் கேரி 14 ரன்களும் அடிக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாக இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து சொதப்பினர். தொடக்க வீரரான பென் ஸ்டோக்ஸ் மட்டும் 41 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொதப்பினர். சாம்சன் 25 ரன்களும் உத்தாப்பா 32 ரன்களும் அடித்தனர். பந்து வீச்சில் ஆன்ரோ நோக்கியா சிறப்பான பந்து வீச்சை வெளிபடுத்தினார். அதனை தொடர்ந்து கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்பு இருந்த நிலையில் அவரும் கைவிட டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் முடிவில் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் கூறியதாவது:வேதனையாக உள்ளது. ஜாஸ் படரும், பென் ஸ்டோக்ஸும் சிறப்பான துவக்கம் கொடுத்தனர், சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடினார், ஆனால் அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர். கடைசி நேரத்தில் ரன்களை குவிக்க தவறிவிட்டோம், அது கடினமாகவும் இருந்தது. ஜோஃப்ரா மிக அருமையாக விளையாடி வருகிறார். எங்களுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சரை போன்று டெல்லி அணிக்கு நார்ட்ஜேவும், ரபாடாவும் உள்ளனர். தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முயற்சிப்போம்" என்றார்.

Next Story