Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆர்சிபியை மட்டும் வெலுத்து வாங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.!

ஆர்சிபியை மட்டும் வெலுத்து வாங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Oct 2020 11:00 AM GMT

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதின. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தனது இரண்டாவது வெற்றி பதிவு செய்ய காத்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

முதலில் களம் இறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் படிக்கல் வழக்கம் போல் அதிரடி காட்டினர். ஆனால் படிக்கல் 18 ரன்னிலும் பின்ச் 20 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழக்க பின்னர் வந்த கேப்டன் கோலி பொருப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பின்னர் வாஷிங்டன் சுந்தர் 13 ரன்களும் சிவம் துபே 23 ரன்கள் அடித்து அவுட் ஆக வீராட் கோலி அரைசதம் வீளாசினார். தாமதமாக களம் இறங்கிய டிவில்லியர்ஸ் 2 ரன்னில் அவுட் ஆக கடைசி நேரத்தில் மோரிஸ் 8 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். பெங்களுரு அணி 171 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி வழக்கம் போல் பெங்களுரு அணியை வெலுத்து வாங்கியது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். மயாங்க் அகர்வால் 45 ரன்னில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய கிறிஸ் கேய்ல் அதிரடியாக விளையாடி அரைசதம் வீளாசினார். கே.எல்.ராகுல் 60 ரன்கள் குவிக்க பஞ்சாப் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.

Next Story