Top
undefined
Begin typing your search above and press return to search.

கே.எல். ராகுல், கிறிஸ் கெய்லாம் இப்படி அடித்தால் எங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லை - கோலி பதில்.!

கே.எல். ராகுல்,  கிறிஸ் கெய்லாம் இப்படி அடித்தால் எங்களால் ஒன்னும் செய்ய முடியவில்லை - கோலி பதில்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Oct 2020 11:00 AM GMT

ஐபிஎல் தொடரில் நேற்றய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப் அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பெங்களுரு அணி ஐந்து போட்டிகள் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்று தகுதி பெறும் நோக்கில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களம் இறங்கினார். பார்ம் இல்லாத காரணத்தால் முதல் ஏழு போட்டிகளில் களம் இறங்காத கெய்ல் இந்த போட்டியில் களம் இறங்கினார்.

முதலில் விளையாடிய பெங்களுரு அணி அதிரடியாக விளையாடினாலும் ஷார்ஷா மைதானத்தில் வெறும் 171 ரன்களை மட்டும் எடுத்தது. பெங்களுரு அணியில் கேப்டன் கோலி மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. அடுத்த களம் இறங்கிய கெய்லும் அதிரடியாக விளையாட பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எளிதில் பெற்றது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில் : இந்த போட்டி ஒரு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. ஏனெனில் இறுதிவரை இந்த போட்டியை நாங்கள் கொண்டு சென்றோம். போட்டியில் எப்போது அழுத்தம் இருக்கும் போதும் அது உங்களை குழப்பமடையச் செய்யும். முடிவில் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடினர். 170 ரன்கள் இந்த மைதானத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று நான் கருதினேன்.

ஆனால் எதிரணி இவ்வளவு அதிரடியாக துவங்கும்போது இந்த ரன்கள் நிச்சயம் பத்தாது மேலும் அவர்களை நாங்கள் அழுத்தத்திற்கு கொண்டுவர முடியவில்லை. இருப்பினும் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த போட்டியின் மூலம் சில நல்ல விடயங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம். இதுபோன்ற போட்டிகளில் தான் மீண்டும் எவ்வாறு பலமாக திரும்பிவர வேண்டும் என்பது புரிகிறது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story