Top
undefined
Begin typing your search above and press return to search.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இயான் மோர்கன் அறிவிப்பு.!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இயான் மோர்கன் அறிவிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Oct 2020 9:45 AM GMT

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முக்கியமான அணியாக உள்ளது. ஐபிஎல் முதல் சீசனில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகின்றது. முதல் மூன்று சீசன்கள் உள்ளூர் நாயகன் சவ்ரோ கங்குலி தலைமையில் விளையாடி வந்தது. முதல் மூன்று சீசன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் இருப்பதை வழக்கமாக இருந்தது.

பின்னர் 2011ம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். இவரின் தலைமையில் தான் கொல்கத்தா அணி பெரி வெற்றிகளை குவித்தது. 2012 ஆம் ஆண்டே சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பின்னர் 2014ம் ஆண்டு மீண்டும் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் வெற்றிகளை குவித்த கவுதம் கம்பீர் சர்வுதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கொல்கத்தா அணி சற்று சரிவை சந்தித்தது. 2018 ஆண்டு கவுதம் கம்பீர் தனது சொந்த ஊரான டெல்லி அணிக்கு விளையாட ஆசைப்பட்டு கொல்கத்தா அணியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் தான் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி அவ்வளவு பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. 2018 ஆண்டு ஐபிஎல்லில் பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. அது மட்டும் தான் தினேஷ் கார்த்திக் சாதனையாக இருந்த நிலையில் இந்த சீசன் வரை தினேஷ் கார்த்திகே கேப்டனாக கொல்கத்தா அணி அறிவித்தது. ஆனால் கொல்கத்தா அணியில் இங்கிலாந்து அணிக்கு உலககோப்பை வாங்கி கொடுத்த இயான் மோர்கன் இருக்கும் போது இவர் கேப்டனாக இருப்பது கடினம் என தொடரின் முன்பே பேசப்பட்ட நிலையில் முதல் ஏழு போட்டிகள் மட்டும் விளையாடிவுள்ள கொல்கத்தா அணி தற்பொழுது புதிய கேப்டனாக இயான் மோர்கனை தேர்வு செய்துள்ளது.

Next Story