Top
undefined
Begin typing your search above and press return to search.

கொல்கத்தா அணியை வீழ்த்தி மீண்டும் முதல் இடம் பிடித்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

கொல்கத்தா அணியை வீழ்த்தி மீண்டும் முதல் இடம் பிடித்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  17 Oct 2020 11:15 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 32வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் மோதிய நிலையில் அந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்த வரையில் இந்த போட்டியில் புதிய கேப்டனாக இயான் மோர்கன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் சுக்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் ராகுல் திரிபாதி 7 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ராணா 5 ரன்னில் வெளியேறினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்னில் அவுட் ஆக தொடர் வீக்கெட்கள் வீழ்ந்தன. அதனை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் மோர்கன் நிலைத்து விளையாட ரஸல் 12 ரன்னில் வெளியேறி அதிரச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழந்த நிலையில் கம்மிங்க்ஸ் கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி அரைசதம் வீளாசினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாட எளிய இலக்கை வேகமாக துரத்தியது மும்பை அணி. கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்னில் அவுட் ஆக டி காக் நிலைத்து விளையாடி 78 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து மும்பை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story