Top
undefined
Begin typing your search above and press return to search.

டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பெற்றது ஆர்சிபி.!

டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பெற்றது ஆர்சிபி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Oct 2020 4:00 AM GMT

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் பேட்டிங்க் செய்ய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் களம் இறங்கினர்.

இந்த தொடரில் முதல் முறையாக ராபின் உத்தப்பா தொடக்க வீரராக களம் இறங்கிய நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . பென் ஸ்டோக்ஸ் 15 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த சந்சு சாம்சன் 9 ரன்னில் அவுட் ஆகினர். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்த ராபின் உத்தப்பா 41 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய பட்லர் 24 ரன்னில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய கேப்டன் ஸ்மித் அரைசதம் விளாசினார். கடைசி ஓவர்களில் திவேடியா அடிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் படிக்கல் இருவரும் களம் இறங்கினர். பின்ச் 14 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் கோலி நிலைத்து விளையாட படிக்கல் அதிரடியாக 35 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அவர் அவுட் ஆகி அடுத்த பந்திலேயே கோலி 43 ரன்னில் அவுட் ஆகினார். கடைசி நேரத்தில் சிக்ஸ்ர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் 6 சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்தார். இதன் மூலம் பெங்களுரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story