Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி.!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மீண்டும் தோல்வி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Oct 2020 4:37 AM GMT

ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர் சாம் க்ர்ரன் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் பாப் டுப் ப்ளஸிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் வாடசன் 36 ரன்னில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ராய்டு அதிரடியாக விளையாட பாப் டுப் ப்ளஸிஸ் அரைசதம் விளாசினார். அவரும் 58 ரன்னில் அவுட் பின்னர் வந்த தோனி 3 ரன்னில் அவுட் ஆகி ஏமாத்தினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜடேஜா கடைசி ஓவரில் அதிரடி காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரை தொடர்ந்து ரஹானே 8 ரன்னில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ஷிகார் தவன் சென்னை அணிக்கு பெரிய தலைவழியை கொடுத்தார். எல்லா ஓவர்களிலும் பவுண்டரிகளை விளாசிய ஷிகர் தவண் இந்த போட்டியில் சதம் விளாசி அசத்தினார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐடேஜா பந்து வீச அக்ஷார் படேல் எளிதில் அடித்து டெல்லி அணிக்கு வெற்றி உறுதி செய்தார்.

Next Story