Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் : செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தீரில் வெற்றி.!

கரீபியன் பிரீமியர் லீக் : செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தீரில் வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  23 Aug 2020 2:30 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 7வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேரன் சாமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் ரயாட் எம்ரிட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ்& நீவிஸ் பேட்ரியட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் & நீவிஸ் பேட்ரியட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் கார்ன்வால் மற்றும் ஆன்ட்ரே ப்லெட்சர் இருவரும் களம் இறங்கினர். ப்லெட்சர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். கார்ன்வால் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் பின்னர் களம் இறங்கிய மார்க் டெயல் 30 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய நஜிபுல்லாஹ் ஜட்ரன் 28 ரன்னிலும் ப்லெட்சர் 46 ரன்னிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த சேஸ் 4 ரன்னில் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய முகமது நபி கடைசி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 35 ரன்கள் அடித்தார். செயின்ட் லூசியா அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் சேர்த்தது.

அதை தொடர்ந்து விளையாடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் பேட்ரியட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் லின் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர். கிரிஸ் லின் 14 ரன்னிலும் அதன் பின்னர் களம் இறங்கிய ட சில்வா 1 ரன்னிலும் அவுட் ஆக லேவிஸ் 29 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ராம்டின் நிலைத்து விளையாடி 46 ரன்கள் அடித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். செயின்ட் லூசியா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது நபி தேர்வுசெய்யப்பட்டார்.

Next Story