Top
undefined
Begin typing your search above and press return to search.

டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 10 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தல்.!

டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 10 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Sep 2020 2:15 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த தொடரின் 29வது லீக் போட்டி ப்ரைன் லாரா அகேடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் கிட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் லிண் 8 ரன்னிலும் லேவிஸ் 12 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களம் இறங்கிய சில்வா 5 ரன்னிலும் பென் டங்க் 2 ரன்னிலும் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். ராம்டின் 19 ரன்களும் கேப்டன் எம்ரிட் 15 ரன்கள் அடித்த நிலையில் செயின்ட் கிட்ஸ் அணி அனைத்து விக்கெட்களை இழந்து 77 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

பின்னர் விளையாடிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் வெப்ஸ்டர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 41 ரன்கள் சேர்த்தார். ஐம்கோ 19 ரன்களும் செப்ரெட் 16 ரன்களும் சேர்த்த நிலையில் நைட் ரைடர்ஸ் அணி 11.3 ஒவரிலேயே எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் முலம் 10 லீக் போட்டிகளிலும் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியது. ஆட்டநாயகனாக பர்வட் அகமத் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story