Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் : கடைசி வரை அதிரடி மன்னன் ரஸல் களத்தில் இருந்து தோல்வியை தழுவிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 104 ரன்களில் சுருட்டிய கயானா வாரியர்ஸ்.!

கரீபியன் பிரீமியர் லீக் : கடைசி வரை அதிரடி மன்னன் ரஸல் களத்தில் இருந்து தோல்வியை தழுவிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 104 ரன்களில் சுருட்டிய கயானா வாரியர்ஸ்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  23 Aug 2020 3:00 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 8வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிஸ் கிரின் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் ரோமன் பவல் தலைமையிலான ஐமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐமைக்கா தல்லாவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கயானா அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் மற்றும் சந்தரபால் ஹேம்ராஜ் இருவரும் களம் இறங்கினர். பிராண்டன் கிங் 29 ரன்களிலும் சந்தரபால் ஹேம்ராஜ் 21 ரன்களிலும் அவுட் ஆக பின்னர் வந்த ஹேட்மயர் ரன் எடுக்காமலும் ராஸ் டெய்லர் 21 ரன்னிலும் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன், கீமோ பால் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அனைத்து விக்கெட்களையும் இழந்த கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 118-10 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் களம் இறங்கிய ஜமைக்கா அணியில் தொடக்க வீரர்கள் ப்லிப்ஸ் மற்றும் வால்டன் இருவரும் ரன் எடுக்காமல் பெவுலியன் திரும்பினர். அடுத்து களம் இறங்கிய போனர் 4 ரன்களில் நடையை கட்டினர். அதை தொடர்ந்து கேப்டன் ரோமன் பவல் நிலைத்து விளையாட மறுமுனையில் ஆஷிப் அலி 14 ரன்னில் அவுட் ஆகினார். கேப்டன் பவல் 23 ரன்னில் அவுட் ஆக ப்ராத்வெய்ட் 5 ரன்னில் வெளியேற ரஸல் மட்டும் நிலைத்து விளையாடினார். அரைசதம் விளாசிய ரஸல் கடைசி வரை களத்தில் இருந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நவீன்-உல்-ஹக் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story