Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் 11 வீரர்கள் விவரத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் 11 வீரர்கள் விவரத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Sep 2020 6:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் களமிறங்க போகும் 11 வீரர்கள் இவர்கள் தான் என தனது கணித்து கூறிவுள்ளார்.

சென்னை அணியில் முதல் சீசனில் இருந்து 3ம் இடத்தில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே போன்று ஹர்பஜன் சிங்கும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் விளையாட போகும் 11 பேர் யார் என்பது அனைவருக்கும் எதிர்பார்ப்பாகவே உள்ள நிலையில் ஆகாஷ் சோப்ரா அவரது விளையாடும் லெவனை அறிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன், அம்பத்தி ராய்டு, பாப் டுப் ப்ளாஸிஸ், கேதர் ஜாதவ், தோனி, ரவிந்திர ஜடேஜா, ப்ராவோ, பிவுஸ் சாவ்லா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், தாகூர். மகேந்திர சிங் தோனி ஐந்தாவது வீரராக களம் இறங்குவார் என கூறியுள்ளார். 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரை போன்றே அம்பத்தி ராய்டு தொடக்க வீரராக களம் இறங்குவார் என கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைவார் என கூறப்பட்டுகின்றது ஆனால் இதுவரை எந்தவோரு அறிவிப்பையும் அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தால் அணி இன்னும் பலமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

Next Story