Top
undefined
Begin typing your search above and press return to search.

ப்லிப்ஸின் நேர்த்தியான ஆட்டத்தால் ஜமைகா தல்லாவாஸ் அணி வெற்றி, செயின்ட் கிட்ஸ் அணியை 110 ரன்களில் சுருட்டியது.!

ப்லிப்ஸின் நேர்த்தியான ஆட்டத்தால் ஜமைகா தல்லாவாஸ் அணி வெற்றி, செயின்ட் கிட்ஸ் அணியை 110 ரன்களில் சுருட்டியது.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  30 Aug 2020 3:00 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் பிரமாண்டாமாக நடைபெற்று வருகின்றது. இந்த லீக் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் தொடர் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 18வது லீக் போட்டி டிரினிடேட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரயாட் எம்ரிட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அட் நிர்க் பெரிடெஸ் அணியும் ரோமன் பவல் தலைமையிலான ஜமைகா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைகா தல்லாவாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய ஜமைகா அணியில் தொடக்க வீரர்கள் பிலிப்ஸ் மற்றும் போன்னெர் இருவரும் களம் இறங்கிய நிலையில் போன்னெர் 16 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய ப்ளாக்வுட் 27 ரன்னில் பெவுலியன் திரும்பினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி ப்லிப்ஸ் அரைசதம் வீளாசினார். மற்ற வீரர்கள் சொதப்பினாலும் ப்லிப்ஸ் 79 ரன்கள் அடிக்க ஜமைகா தல்லாவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 147-6 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியில் தொடக்க வீரர் லிண் 8 ரன்னில் வெளியேற அதை தொடர்ந்து களம் இறங்கிய ராம்டின் மற்றும் பவல் இருவரும் சிறிது நேரம் நின்று விளையாடிய நிலையில் பவல் 21, ராம்டின் 13 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். ப்ராத்வெய்ட் 3, எட்வார்ட் 2, லாமிட்சானே 2, பெருமால் 2, முஜிப் 1 விக்கெட்களை விழ்த்தினர். செயின்ட் அணி 110-10 ரன்கள் அடித்தது. ஆட்டநாயகனாக ப்லிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story