Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்வார்ட் ப்ராடுக்கு 15% அபராதம் விதித்தது ஐசிசி .!

ஸ்வார்ட் ப்ராடுக்கு 15% அபராதம் விதித்தது ஐசிசி .!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Aug 2020 3:00 AM GMT

பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 3 வீக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மான்செஸ்டரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழல்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் இங்கிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்வார்ட் ப்ராட் பொருத்தமற்ற மொழியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 46வது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை தொடரந்து போட்டியின் வாருவாயில் இருந்து 15 சதவிதம் அபராதம் அளித்து ஐசிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஐசிசி நடத்தை விதிகளில் 2.5 மீறியதாக கூறப்பட்டுள்ளது. இந்த விதியின் படி மொழி, செயல், சைகைகளை பயன்படுத்துவது அல்லது இழிவுபடுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த விதி பொருந்தும். இது ஸ்வார்ட் ப்ராடின் 24 மாத காலத்தில் மூன்றாவது குற்றமாகும். ப்ராடின் குறைபாடு புள்ளிகள் மூன்றாக உள்ளது.

Next Story