Top
undefined
Begin typing your search above and press return to search.

நாளை தொடங்குகிறது கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்.!

நாளை தொடங்குகிறது கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  17 Aug 2020 9:45 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் இது மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டி-20 கிரிக்கெட் தொடர். இந்த தொடர் 2013 ஆம் ஆண்டு முதல் மேற்கு இந்திய தீவுகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த கிரிக்கெட் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சிபிஎல் என்று அழைக்கப்படும் இந்த தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான சீசன் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ்டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்,ஜமைக்கா தல்லாவாஸ்,பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ்,செயின்ட் லூசியா ஸோக்ஸ்,செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் ஆகிய அணிகள் விளையாட உள்ளது.

இந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் இளம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் உருவாக்க இந்த தொடர் நடத்தப்படுகின்றது. இந்த டி-20 கிரிக்கெட் தொடரில் ஒரு அணியில் ஐந்து சர்வதேச வீரர்கள் மட்டுமே விளையாட முடியும் என்ற விதிகளை கொண்டுள்ளது. அதே போல் 23 வயது உட்பட்ட வீரர்கள் நான்கு பேர் இடம் பெற வேண்டும் என்ற விதிகளும் உள்ளது.

இந்த தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர்கள் கிரிஸ் கெய்ல், ப்ராவோ, பெலாட், ஹெட்மயர், சிம்மன்ஸ், ஹோப் போன்ற வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர்.

Next Story