Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் முதல் டி-20 போட்டியில் அதிரடி காட்டிய சுனில் நரைன்.!

கரீபியன் பிரீமியர் லீக் முதல் டி-20 போட்டியில் அதிரடி காட்டிய சுனில் நரைன்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 Aug 2020 4:00 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. லீக் தொடரின் முதல் போட்டி வெஸ்டி இண்டிஸில் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. முதல் போட்டியில் பெல்லாட் தலைமைலான டிரினிபாகோ நைட் ரைடர்ஸ் அணியும் கிரிஸ் கீரின் தலைமைலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

போட்டி மழையின் காரணமாக 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரினிபாகோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமேசான் வாரியார்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் சிம்ரன் ஹெட்மயர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாசினார். அதற்கு அடுத்தபடியாக ரோஸ் டெய்லர் 33 ரன்கள் அடிக்க அமேசான் வாரியர்ஸ் 17 ஓவர்கள் முடிவில் 144-5 ரன்கள் அடித்தது. டிரினிபாகோ அணியில் சுனில் நரைன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதன் பின்னர் களம் இறங்கிய டிரினிபாகோ அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிம்மன்ஸ் 17 ரன்களில் விக்கெட் இழந்த நிலையில் அடுத்த களம் இறங்கிய முன்ரோ 17 மற்றும் டெரன் ப்ராவோ 30 ரன்கள் அடித்த நிலையில் சுனில் நரைன் அரைசதம் வீளாசினார். கயானா அணியில் இம்ரான் தாஹிர் மற்றும் நவின் உல் ஹக் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். டிரினிபாகோ அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story