Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீமியர் பிரீமியர் லீக் : இரண்டாவது டி-20 போட்டியில் ரஷித் கான் மற்றும் சாட்னர் சுழலில் வீழ்ந்தது செயின்ட் கிட்ஸ் அணி.!

கரீமியர் பிரீமியர் லீக் : இரண்டாவது டி-20 போட்டியில் ரஷித் கான் மற்றும் சாட்னர் சுழலில் வீழ்ந்தது செயின்ட் கிட்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 Aug 2020 4:45 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. லீக் தொடரின் இரண்டாவது போட்டி வெஸ்டி இண்டிஸில் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோல்டர் தலைமையிலான பார்படாஸ் ட்ரைடென்ஸ் அணியும் ரைய்டு எம்ரிட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ்& நெவிஸ்பெட்ரிட்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய பார்படாஸ் அணியில் தொடக்க வீரர்கள் சார்லஸ் 4 ரன்கள், ஷாய் ஹோப் 3 ரன்கள் மற்றும் கோரி ஆன்டர்சன் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின்னர் மயர்ஸ் மற்றும் ஹோல்டர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த அணி மீண்டது. ஹோல்டர் 38, மயர்ஸ் 37 ரன்கள் அடித்து விக்கெட்களை இழக்க அதன் பின்னர் சாட்னர் மற்றும் ரஷித் கான் இருவரும் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த பார்படாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 153-9 ரன்கள் எடுத்தது. செயின்ட் அணியில் தன்வீர், கட்ரொல் மற்றும் எம்ரீட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதன் பின்னர் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கிரிஸ் லிண் 19 ரன்களும் லேவிஸ் 12 ரன்கள் அடிக்க அடுத்து வந்த சில்வா 41 ரன்கள் அடித்தார். பென் டாங்க் 34 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். சாட்னர் மற்றும் ரஷித் கான் பந்து வீச்சில் செயின்ட் கிட்ஸ் அணி தடுமாறியது. கடைசி ஓவர் வரை வெற்றி போராடிய நிலையில் பார்படாஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சாட்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story