Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி-20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி-20  தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 Aug 2020 6:45 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 21ம் தேதி தொடங்க உள்ள நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி பங்கேற்று வருவதால் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், பட்லர், சாம் க்ரான், வோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. மோர்கன் தலைமையிலான அணி பின்வருமாறு: ஈயோன் மோர்கன் (இ), மொயீன் அலி, ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், ஆதில் ரஷீத், ஜேசன் ராய், டேவிட் வில்லி.

Next Story