Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் மூன்றாவது டி-20 போட்டியில் பிலிப்ஸ் மற்றும் ஆஷிப் அலியின் அதிரடியில் ஜமைக்கா அணி வெற்றி.!

கரீபியன் பிரீமியர் லீக் மூன்றாவது டி-20 போட்டியில் பிலிப்ஸ் மற்றும் ஆஷிப் அலியின் அதிரடியில் ஜமைக்கா அணி  வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  20 Aug 2020 4:45 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. லீக் தொடரின் 3வது போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொரோனா தொற்று காரணமாக போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது. இந்த போட்டியில் டெரன் சமி தலைமையிலான செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் ரோமன் பவல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் கார்ன்வால் 9 ரன்களிலும் ஆன்ட்ரே ப்லெட்சர் 22 ரன்களிலும் அடுத்து வந்த மார்க் டெயல் 17 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய ரோஸ்டன் செஸ் 52 ரன்கள் குவித்தார். அடுத்த வந்த வீரர்களில் நஜிப்புல்லா 25 ரன்களும் நபி 13 ரன்கள் அடிக்க செயின்ட் லூசியா அணி 20 ஓவர்கள் முடிவில் 158-7 ரன்கள் எடுத்தது.

அதன் பின்னர் விளையாடிய ஜமைக்கா தல்லாவாஸ் அணியில் தொடக்க வீரர் சாட்விக் வால்டன் 2 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி 44 ரன்கள் அடித்தார். கேப்டன் ரோமன் பவல் 26 ரன்கள் அடித்த அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஆஷிப் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 47 ரன்கள் அடித்து வெற்றி உதவினார். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஷிப் அலி தேர்வு செய்யப்பட்டார்.

Next Story