Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பிடித்தார் பாகிஸ்தான் அணியின் முகமது அமீர்.!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இடம்பிடித்தார் பாகிஸ்தான் அணியின் முகமது அமீர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  22 Aug 2020 9:45 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி சவுதாம்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி புதிய பாகிஸ்தான் அணியாக உருவாகியுள்ளது. பாபர் ஆசாம் புதிய டி-20 கேப்டனாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடி வருகிறார். மூத்த வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். முகமது அமீர் மீண்டும் அணிக்கு திரும்பினார். மாலீக் மற்றும் ஹபீஸ் ஆகிய வீரர்களும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணி விபரம்; பாபர் அசாம் (இ), ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமீர், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, ஷாதாப் கான் மாலிக் மற்றும் வஹாப் ரியாஸ்.

Next Story