Top
undefined
Begin typing your search above and press return to search.

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகள் வெற்றியை குவித்து வரும் பெல்பாஸ்ட்-ன் டிரினிடாட் அணி.!

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 தொடரில் தொடர்ந்து நான்கு போட்டிகள் வெற்றியை குவித்து வரும் பெல்பாஸ்ட்-ன் டிரினிடாட் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 Aug 2020 3:30 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 13வது லீக் போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெல்லார்ட் தலைமையிலான டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணியும் டேரன் சாமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரினிடாட் நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து விளையாடிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் ஆன்ரே ப்ளாட்சர் மற்றும் கரன்வால் இருவரும் களம் இறங்கினர். முதலில் கரன்வால் 18 ரன்னில் ப்ராவோ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய மார்க் டையல் 16 ரன்னிலும் ப்ளாட்சர் 10 ரன்னிலும் ரோசன் சேஸ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் நஜிபுல்லா மற்றும் முகமது நபி ஆகியோர் சிறப்பான ஆட்டத்த வெளிபடுத்தினர். ஆட்டத்தின் 17.1 ஓவரில் மழை குறுக்கிட்டால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன் பின்னர் விளையாடிய டிரினிடாட் அணிக்கு 9 ஓவர்கள் 72 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிம்மன்ஸ் மற்றும் வெப்ஸ்டர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய முன்ரோ மற்றும் ப்ராவோ இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த டிரினிடாட் அணி 8 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக டூவைன் ப்ராவோ தேர்வு செய்யப்பட்டார்.

Next Story