Top
undefined
Begin typing your search above and press return to search.

புதிய ஜெர்சியுடன் களம் இறங்கும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள், இன்று தொடங்குகிறது டி-20 தொடர்.!

புதிய ஜெர்சியுடன் களம் இறங்கும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள், இன்று தொடங்குகிறது டி-20 தொடர்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  28 Aug 2020 2:30 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை வென்றுள்ள இங்கிலாந்து அணி உற்சாகத்தில் உள்ளது. இந்நிலையில் மூன்று டி-30 போட்டிகள் கொண்ட தொடர் இன்று இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் எனினும் டி-20 போன்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி வலுவான அணி என்பதால் இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடரில் பெற்று தோல்விக்கு டி-20 தொடரில் பதிலாடி கொடுக்குமா பாகிஸ்தான் அணி என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த டி-20 தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் புதிய ஜெர்சியில் விளையாட உள்ளனர். நேற்று நடைபெற்ற கோப்பை அறிமுக வீழாவில் புதிய ஜெர்சியுடன் கேப்டன்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் அணியின் ஜெர்சி 1999ம் ஆண்டு உலககோப்பையில் பயன்படுத்திய ஜெர்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி : ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், டாம் குர்ரான், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், சாகிப் மஹ்மூத், டேவிட் மாலன், ஆதில் ரஷீத், ஜேசன் ராய் மற்றும் டேவிட் வில்லி.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (இ), ஃபக்கர் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, இமாத் வாசிம், குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமீர், நசீம் ஷா, சர்பராஸ் அகமது, ஷாதாப் கான் மாலிக் மற்றும் வஹாப் ரியாஸ்.

Next Story