Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகல், மாற்று வீரரை அறிவித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.!

இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகல், மாற்று வீரரை அறிவித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 Aug 2020 4:51 PM GMT

இங்கிலாந்து அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டகாரர் ஜேசன் ராய் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி-20 தொடர்களில் காயம் காரணமாக விலகல் டெல்லி அணி மாற்று வீரரை அறிவித்தது.

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில் இன்று மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பம் ஆகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர் ஜேசன் ராய்க்கு பயிற்சியின் போது இடது கையில் காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகாக விளையாட இருந்த நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகி உள்ளார். இதை தொடர்ந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி மாற்று விரரை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆல்-ரவுண்டர் டெனியல் சாம்ஸ் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Next Story