Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா அணிக்கு ஏதிரான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு, பட்லர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்.!

ஆஸ்திரேலியா அணிக்கு ஏதிரான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு, பட்லர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Sep 2020 2:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்துள்ள நிலையில் 7 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு தற்பொழுது பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடர் வரும் செப்டம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில் இடம்பிடித்தார் ஜோப்ரா ஆர்ச்சர். பட்லர் அணிக்கு திரும்பினார்.

டி-20 அணி: ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், அடில் ரஷீத், மார்க் வூட்

ஓடிஐ அணி: ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், அடில் ரஷீத், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

Next Story