Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி, தொடரை சமன் செய்தது பாகிஸ்தான் அணி.!

மூன்றாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி, தொடரை சமன் செய்தது பாகிஸ்தான் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Sep 2020 4:45 AM GMT

இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் டி-20 போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இங்கிலாந்து அணி ஆர்வமாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பாபர் ஆஷாம் மற்றும் பக்கர் ஜமாம் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமாம் 1 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஹைடர் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். கேப்டன் பாபர் ஆஷாம் 21 ரன்னில் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய முகமது ஹபிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஹைடர் அலி 54 ரன்களும் முகமது ஹபிஸ் 66 ரன்களும் அடிக்க பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 190/4 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பேஸ்ரோ மற்றும் பண்டென் இருவரும் களம் இறங்கிய நிலையில் பேஸ்ரோ டக்அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய டேவிட் மாலன் 7 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய கேப்டன் மோர்கன் 10 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய பில்லிங்ஸ் 26 ரன்னில் அவுட் ஆகினார். பண்டென் 46 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த மோயின் அலி அதிரடியாக விளையாடிய நிலையில் கடைசி வரை போராடிய மோயின் அலி 61 ரன்னில் அவுட் ஆகினார். கடைசி ஓவரில் பாகிஸாதான் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக முகமது ஹபிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story